நாமக்கல்லில் பிப். 3ம் தேதி அண்ணா நினைவு நாள் அமைதி பேரணி

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு, வருகிற 3ம் தேதி சனிக்கிழமை அமைதி பேரணி நடைபெறுகிறது.

Update: 2024-01-31 11:15 GMT

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு, வருகிற 3ம் தேதி சனிக்கிழமை அமைதி பேரணி நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வருகிற பிப். 3ம் தேதி சனிக்கிழமை, மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் நினைவுநாளை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாமக்கல் நகரில் அமைதி பேரணி நடைபெறும். 3ம் தேதி காலை 7.30 மணிக்கு, நாமக்கல் மெயின் ரோட்டில் நேதாஜி சிலை அருகில் இருந்து அமைதி பேரணி துவங்கும்.

கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. பேரணிக்கு தலைமை வகிக்கிறார். நாமக்கல் நகர செயலாளர்கள் பூபதி, சிவக்குமார், ராணா ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நேதாஜி சிலை அருகில் இருந்து துவங்கும் அமைதி பேரணி கடை வீதி, பேருந்து நிலையம், மணிக்கூண்டு வழியாக அண்ணா சிலையை வந்தடையும். அங்கு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்படும்.

தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, நகராட்சித்தலைவர் கலாநிதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். அமைதி பேரணியில், ஒன்றிய, நகர, பேரூராட்சி திமுக செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில, மாவட்ட திமுக நிர்வாகிகள், இளைஞரணி, மகளிர் அணி உள்ளிட்ட அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள், கிளை கழக செயலாளர்கள், வார்டு கழக செயலாளர்கள், திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என ராஜேஷ்குமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News