ஓட்டுப்பதிவுக்கு தேவையான 34 பொருட்கள்; பிரித்து அனுப்பும் பணி துவங்கியது

Namakkal news- ஓட்டுப்பதிவுக்கு தேவையான 34 பொருட்கள் பிரித்து அனுப்பும் பணி நாமக்கல் தாலுகா அலுவலகத்தில் துவங்கியது

Update: 2024-04-17 01:00 GMT

Namakkal news- வாக்குப்பதிவுக்கு தேவையான 34 பொருட்கள், வாக்குச்சாவடி வாரியாக பிரித்து அனுப்பும் பணியை, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Namakkal news, Namakkal news today- ஏப். 19ம் தேதி நடைபெறும், லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவிற்கு, தேவையான 34 பொருட்களை ஓட்டுச்சாவடி வாரியாக பிரித்து அனுப்பும் பணி துவங்கியது. மாவட்ட கலெக்டர் அவற்றை நேரில் பார்த்து ஆய்வு செய்தார்.

நாமக்கல் தாலுகா அலுவலகத்தில், லோக்சபா பொதுத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்களை வாக்குச்சாவடி வாரியாக பிரித்து அனுப்ப தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது,.

இப்பணிகளை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: லோக்சபா பொதுத் தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள 1,628 வாக்குச்சாவடிகளில் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்,கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்கினை சரிபார்க்கும் விவிபேட் கருவிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்து ஏற்கனவே சம்மந்தப்பட்ட சட்டசபை தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்சசியாக வாக்குப்பதிவிற்கு தேவைப்படும் தகவல் பலகை, அழியாத மை, முத்திரைகள், ஊதா நிற ஸ்டாம்ப் பேடு, பேனா, பென்சில், ஏ 4 தாள்கள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, நூல், கார்பன் பேப்பர், ரப்பர் பேன்டு, டேப், பேக்கிங் சீட், பிளேடு உள்ளிட்ட 34 வகையான பொருட்கள் வாக்குச்சாவடிகளுக்கு பிரித்து அனுப்ப தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். இவை அனைத்தும் நாளை 18ம் தேதி சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறினார்.

நாமக்கல் தாசில்தார் சீனிவாசன் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News