நாமக்கல் மாவட்டத்தில் 2.30 லட்சம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடவில்லை

நாமக்கல் மாவட்டத்தில் இன்னும் 2.30 லட்சம் பேர் ஒரு தவணை கூட கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என கலெக்டர் கவலை தெரிவித்ததுள்ளார்.

Update: 2022-07-08 11:15 GMT

பைல் படம்.

இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 15,15,000 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 12,84,824 நபர்களுக்கு போடப்பட்டுள்ளது. இன்னும் 2,30,176 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போட வேண்டியுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 10,26,242 பேருக்கு போடப்பட்டுள்ளது. 2,58,582 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டியுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை நடந்த 30 மெகா தடுப்பூசி முகாம்களில் 8,36,522 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர். வரும் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 31ம் கட்ட மெகா தடுப்பூசி நடைபெறுகிறது. மாவட்டத்தில்உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் அமைக்கப்படும் 2,766 முகாம்கள் மூலம், காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை கொரோனா நோய் தடுப்பூசி போடப்படும். இந்தமுகாம்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூட போடாதவர்களும், முதலாம் தவணை போட்டு முடித்து இரண்டாம் தவணைக்காக நிலுவையில் உள்ளவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 3வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போட்டு பயன்பெறலாம்.

மேலும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களும் எந்தவித தயக்கமும் இன்றி தடுப்பூசி போட்டுக்கொண்டால், கொரானா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும், வீரியம் குறைவாக காணப்படும். கொரோனா தொற்று முற்றிலும் ஒழியவில்லை. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News