நாமக்கல் லோக் அதலாத்தில் ரூ.11.55 கோடி மதிப்பில் 1,985 வழக்குகளுக்கு தீர்வு

நாமக்கல்லில் நடைபெற்ற லோக் அதலாத்தில் ரூ.11.55 கோடி மதிப்பிலான 1,985 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2021-12-12 10:15 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்ச்சியில், வழக்கு தீர்வு உத்தரவுகளை மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது.

மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தவார். நீதிபதிகள் பாலசுப்ரமணியம், நந்தினி, சுந்தரையா, சரவணன், ஸ்ரீவித்யா, முருகன், மாலதி, ரேவதி, விஜய் அழகிரி, தமயந்தி, ஜெயந்தி, ஹரிஹரன், கபாலீஸ்வரன், வி. பிரியா மற்றும் வக்கீல்களைக் கொண்ட அமர்வுகள் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

விபத்துகள் தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள், மின் பயன்பாடு, வீட்டு வரி மற்றும் இதர பொதுபயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளபட்டன. மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 6,571 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளபட்டன. இவற்றில் 1985 வழக்குகளுக்கு, ரூ.11 கோடியே 55 லட்சத்து, 38 ஆயிரத்து, 133 மதிப்பீட்டில் தீர்வு காணப்பட்டன.

மக்கள் நீதிமன்றத்தின் ஏற்பாடுகளை, மாவட்ட தலைமை நீதிபதி குணசேகரன் தலைமையில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஸ்ரீவித்யா செய்திருந்தார்.

Tags:    

Similar News