நாமக்கல்: மானியத்துடன் கால்நடை இன்சூரன்ஸ் திட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் மானியத்துடன் தங்கள் கால்நடைகளை இன்சூரன்ஸ் செய்து பயன்பெறலாம்.

Update: 2021-06-08 08:15 GMT

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் மானியத்துடன் தங்கள் கால்நடைகளை இன்சூரன்ஸ் செய்து பயன்பெறலாம்.

இது குறித்து கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மானியத்துடன் கூடிய கால்நடை இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நடப்பு ஆண்டிற்கு நாமக்கல் மாவட்டத்தில் 4,900 கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் செய்ய குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30,000 வரை மானியத்துடன் இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம். வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் மானியத்திலும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினருக்கு 70 சதவீதம் மானியத்திலும் இன்சூரன்ஸ் செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு 5 பசு மற்றும் எருமை மாடுகளுக்கு இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் இரண்டரை வயது முதல் 8 வயது உடைய பசு மற்றும் எருமைகளுக்கு இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம். கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் செய்ய விரும்பும் கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தினை அணுகி பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News