நாமக்கல் அடுத்த எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு

நாமக்கல் அருகே எருமப்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 650-க்கும் மேற்ப்பட்ட காளைகளும், 400-க்கும் மேற்ப்பட்ட மாடு பிடி வீரர்களும் பங்கேற்பு.

Update: 2021-02-16 11:04 GMT

நாமக்கல் அடுத்த எருமப்பட்டி பகுதியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியினை வருவாய் கோட்டாட்சியர் கோட்டை குமார், நாமக்கல் எம்.பி சின்ராஜ் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். முன்னதாக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்து கொள்வோம் என மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். போட்டியில் அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, சேந்தமங்கலம், முள்ளுக்குறிச்சி, தம்மம்பட்டி, சேலம், துறையூர், திருச்சி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 650க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்து வந்த காளைகளை 350-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீர்ர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். இதில் காளைகளின் திமிலை பிடித்து அடக்கிய வீர்ர்களுக்கு டி.வி, பிரிட்ஜ், மிக்ஸி, சைக்கிள், கட்டில், வெள்ளிக் காசுகள், சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன. பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சோபா, கட்டில் மற்றும் வெள்ளி பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. 

ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி மருத்துவ குழுவினர்கள், கால்நடை மருத்துவர்கள், காவல், வருவாய்த்துறை என 6 குழுவினர்களும், 100-க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். இப்போட்டியினை காண சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்காக பொதுமக்கள் வந்திருந்தனர்.

Tags:    

Similar News