மல்லசமுத்திர வாலிபருக்கு 6 ஆண்டு சிறை..!

மல்லசமுத்திர வாலிபருக்கு 6 ஆண்டு சிறை.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;

Update: 2025-01-29 06:54 GMT

மல்லசமுத்திரம், ஜன.29: 
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த கூத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் மகன் பிரபு(36). விவசாயம் செய்து வருகிறார். கடந்த 9.10.2019. அன்று இவரது நுழைந்த மர்ம நபர் தாலிக்கொடி, நெக்லஸ், மோதிரம் 8 பவுன் நகைகளை திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து பிரபு கொடுத்த புகாரின் பேரில் அப்போதையை எஸ்ஐ ராமச்சந்திரன், வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்டதாக சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி வெள்ளையகவுண்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் மணிகண்டன்(36) என்பவரை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.

எந்த வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது?

மணிகண்டனை சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மணிகண்டன் ஜாமீன் வெளியே வந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதி எப்படி தீர்ப்பு வழங்கினார்?

நீதிபதி சுரேஷ்பாபு, விவசாயி வீட்டில் நகை திருடிய மணிகண்டனுக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ₹20 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர்.

மணிகண்டன் இப்போது எங்கு அடைக்கப்பட்டுள்ளார்?

இதையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News