குமாரபாளையம்; ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய காளையர்கள்

குமாரபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை, வீரர்கள் போட்டி போட்டுகொண்டு அடக்கினர்.;

Update: 2024-01-28 07:30 GMT

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

குமாரபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை காளையர்கள் போட்டி போட்டுகொண்டு அடக்கினர்.

குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. 500 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இந்த போட்டியை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் மற்றும் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் வசந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஆர்.டி.ஒ. சுகந்தி உறுதி மொழி வாசிக்க, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியேற்றனர். தொடர்ந்து மாடுகளை மாடு பிடி வீரர்கள் அடக்கினர்.

மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு ஒரு கிராம் தங்க காசு, பத்து கிராம் வெள்ளிக்காசு, ட்ரெஸ்ஸிங்க் டேபிள்,குக்கர்,மிக்சி உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் மாடு முட்டியதில் காயமடைந்து பலருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. வாடிவாசல் நோக்கி திரும்பி வந்த இரண்டு மாடுகளை தடுக்க வாடிவாசல் கதவுகள் அடைக்கப்படும் போது, மாடுபிடி வீரர் ஒருவரது கால் விரல்கள் கதவுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சேலம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


                   ஜல்லிக்கட்டு போட்டியில் காலில் பலத்த காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, தீயணைப்பு துறை, மின்வாரியத்தினர், போலீசார், வருவாய்த்துறையினர் உள்பட பல்வேறு துறையினர் பங்கேற்றனர். எஸ்.எஸ்.எம். கல்வி நிறுவன தாளாளர் மதிவாணன், ஆற்றல் அசோக்குமார், தாசில்தார் சண்முகவேல், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Similar News