காளியம்மன் கோவிலில் திருவிழா கமிட்டி தலைவர், தன் பொறுப்பிலிருந்து விலகல்
குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் திருவிழா கமிட்டி தலைவர், தன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.;
காளியம்மன் கோவிலில் திருவிழா கமிட்டி தலைவர், தன் பொறுப்பிலிருந்து விலகல்
குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் திருவிழா கமிட்டி தலைவர், தன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவில் மகா குண்டம், தேர்த்திருவிழா, பிப். 18ல் பூச்சாட்டுதல், பிப். 25ல் மறு பூச்சாட்டு, பிப். 26ல் கொடியேற்றம், மார்ச் 4ல் தேர்கலசம் வைத்தல், அதே நாள் இரவு காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைத்தல், மார்ச் 5ல் மகா குண்டம், பூ மிதித்தல், மார்ச் 6ல் அம்மன் திருக்கல்யாணம், தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, மார்ச் 7ல் தேர் நிலை நிறுத்துதல், வாண வேடிக்கை, அம்மன் திருவீதி உலா, மார்ச் 8ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, மார்ச் 9ல் அம்மனுக்கு ஊஞ்சல் விழா ஆகிய வைபவங்கள் நடத்துவது என, திருவிழா கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தி தீர்மானிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் கோவில் அலுவலகம் உள்ளது. இதில்தான் அறநிலையத்துறை செயல் அலுவலர் தன் அலுவலக பணிகளை செய்து வருவது வழக்கம். இதே அலுவலகத்தில் தான், கோவில் திருவிழா பணிகளை, திருவிழா கமிட்டி நிர்வாகிகள் நடத்தி வருகிறார்கள். செயல் அலுவலர் இருக்கையில் அமர்ந்து தான், கோவில் திருவிழா கமிட்டி தலைவர் உட்கார்ந்து பணியாற்றி வருவார். இது குறித்து தற்போதைய செயல் அலுவலர் குணசேகரன், தன் இருக்கையில் அமர்ந்து கோவில் பணிகளை செய்யாமல், தனி இருக்கை அமைத்து, திருவிழா பணிகளை செய்யுங்கள் என்று கமிட்டி நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். இதனால் புதியதாக விழா கமிட்டி தலைவராக தேர்வு செய்யப்பட்ட குணசேகரன், வேறு தலைவர் மற்றும் நிர்வாகிகளை தேர்வு செய்து திருவிழா நடத்தி கொள்ளுங்கள் என்றும், தன் பொறுப்பிலிருந்து விலகி கொள்வதாகவும் கூறியதாக தெரிகிறது.
இது குறித்து செயல்அலுவலர் குணசேகரன் கூறியதாவது:
அறநிலையத்துறை சார்பில் காளியம்மன் கோவிலில் எந்த நிர்வாகியும் நியமிக்கப்படவில்லை. கோவில் அலுவலகத்தில், நான் அமரும் இருக்கையில் அமராமல், தனி இருக்கை அமைத்து விழா பணிகள் செய்யுங்கள் என்று சொன்னேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவிழா கமிட்டி தலைவராக தேர்வு செய்யப்பட்ட குணசேகரன் கூறியதாவது:
செயல் அலுவலர் அவரது இருக்கையில் அமராமல், தனி இருக்கை அமைத்து பணியாற்ற சொன்னார். தற்போது என் உடல்நலம் சரியில்லை என்பதால், நான் விழா கமிட்டி தலைவராக இருந்து பணியாற்ற முடியாத நிலையில் உள்ளதால், வேறு ஒரு குழுவினரை நியமனம் செய்து, விழா பணிகளை செய்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
படவிளக்கம்
குமாரபாளையம் காளியம்மன்