குமாரபாளையம்; ராஜ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்
குமாரபாளையத்தில் உடையார் பேட்டை ராஜ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா துவங்கியது.;
ராஜ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
குமாரபாளையத்தில் உடையார் பேட்டை ராஜ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா துவங்கியது.
குமாரபாளையம் உடையார்பேட்டை ராஜ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.18ல் கிராமசாந்தி பூஜையுடன் துவங்கியது. நேற்று கணபதி யாக பூஜை புண்யாக வாசனம் உள்ளிட்ட பூஜைகளும், பவானி கூடுதுறை ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலமும், முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது.
கோவில் வளாகத்தில் உள்ள திருநீலகண்டர் நாயனார், பாலசுப்ரமணியர், துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று காலை 09:45 மணிக்கு, கும்பாபிஷேக விழாவையொட்டி, சிவாச்சாரியார்களால் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. யாகசாலை பூஜை மற்றும் கும்பாபிஷேக பூஜைகளை பவானி பாலாஜி சிவம் மற்றும் குழுவினர் நடத்தி வருகின்றனர். நிர்வாகிகள் சரவணன், செந்தில்குமார், சக்திவேல், கார்த்திகேயன் உள்பட பலர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கும்பாபிஷேக விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
குமாரபாளையம் காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
குமாரபாளையம் காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா கிராம சாந்தி பூஜையுடன் துவங்கியது. கணபதி பூஜை, பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டு, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டன. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், மஞ்சள் ஆடை அணிந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்தனர்.
நவகிரக ஹோமம், பூமி பூஜை செய்து மண் எடுத்தல், ஜன. 19 அஷ்ட லட்சுமி ஹோமம், முதற்கால யாக சாலை பூஜைகள் நடந்தன. ஜன. 20ல் காலை இரண்டாம் கால யாக சாலை பூஜைகள், மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை 06:30 மணிக்கு நான்காம் கால பூஜை, காலை 10:15 மணிக்கு மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, கோபுர கலசங்களுக்கு புனித நீர் சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்பட்டது. இரவு உற்சவ மூர்த்தி திருவீதி உலா நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.
இந்த கும்பாபிஷேக விழாவை பவானி காளிங்கராயன்பாளையம் மணிகண்டன் சிவாச்சாரியார், கோவில் அர்ச்சகர் சதாசிவம் மற்றும் விழாக் குழுவினர் ரகுநாதன், நடராஜபெருமாள் உள்பட பலர் நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.