குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி சார்பில் பொங்கல் விழா
குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி, விடியல் ஆரம்பம் சார்பில் பொங்கல் கொண்டாடப்பட்டது.;
குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி, விடியல் ஆரம்பம் சார்பில் பொங்கல் கொண்டாடப்பட்டது.
குமாரபாளையத்தில் கலைமகள் வீதியில் செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி மையம், விடியல் ஆரம்பம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவியர் பலர் பாரம்பரிய உடையில் பங்கேற்றனர். பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடியல் பிரகாஷ் வழங்கினார். இதில் தன்னார்வலர்கள் ராணி, சித்ரா, நிர்வாகிகள் பஞ்சாலை சண்முகம், தீனா, உள்பட பலர் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல், கரும்புகள் வழங்கப்பட்டன.
வேலை வாய்ப்பு முகாம்
குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சேவை சங்கம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சேவை சங்கம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை சுகந்தி, சமூக சேவகி சித்ரா, இல்லம் தேடி கல்வி ஜமுனா, சித்ரா ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தனர். 60-க்கும் மேற்பட்ட தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு தேவைப்படும் ஆட்களை தேர்வு செய்ய நேர்முகத் தேர்வை நடத்தினர் 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். தேர்வு செய்யப்பட்ட 154 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை விடியல் ஆரம்பம் நிறுவனர் பிரகாஷ், தொழிலதிபர் கோபாலகிருஷ்ணன், பஞ்சாலை சண்முகம், ரெயின்போ கணேஷ்குமார், தீனா ஆகியோர் வழங்கினார்கள்.