குமாரபாளையம் வழியாக பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்

குமாரபாளையம் வழியாக, முருக பக்தர்கள் பாத யாத்திரையாக பழனி சென்று கொண்டு இருக்கின்றனர்.

Update: 2022-01-15 13:00 GMT

குமாரபாளையம் வழியாக, காவடி சுமந்து கொண்டு பழனிக்கு சென்ற முருக பக்தர்கள். 

தைப்பூச திருவிழா ஜன. 18ல் வருவதையொட்டி, அறுபடை வீடுகளுக்கு அந்தந்த பகுதியில் இருக்கும் பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். குறிப்பாக, பழனி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காவடி சுமந்து நடந்து செல்கின்றனர். அவ்வகையில், இடைப்பாடி, சங்ககிரி, தேவூர், பச்சாம்பாளையம், படைவீடு, தாரமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த முருக பக்தர்கள் குமாரபாளையம் வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக சென்றனர்.

வட்டமலை, குப்பாண்டபாளையம் பகுதியில் பக்தர்களுக்கு அன்னதானம், மோர் மற்றும் குடிநீர் ஆகியன வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற காவடிகளுடன் சென்றனர். ஆண்கள், பெண்கள், திருமணம் ஆகாத இளைஞர்கள், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் உள்பட ஏராளமானோர் பாதயாத்திரை சென்றனர்.

Tags:    

Similar News