குமாரபாளையத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிப்பு
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளையொட்டி குமாரபாளையம் மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூணிற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது.;
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளையொட்டி குமாரபாளையம் மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூணிற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது.
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளையொட்டி குமாரபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூணிற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது. இதில் மொழிப்போர் தியாகிகள் குறித்து அனைவரும் எடுத்துரைத்தனர். பங்கேற்ற அனைவரும் மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினர்.
தி.மு.க மாவட்ட செயலாளர் மதுராசெந்தில், மாவட்ட தி.மு.க பொருளாளர் ராஜாராம், வடக்கு நகர பொறுப்பாளர் நகர்மன்ற த்தலைவர் விஜய்கண்ணன், தெற்கு நகர பொறுப்பாளர் .ஞானசேகரன், எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி தலைவர் மதிவாணன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட பொறுப்பாளர் சித்ரா உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பு அணியினர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
இந்தி திணிப்பை எதிர்த்து, தமிழ் மொழியைக் காக்க உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நடந்த 1965-ம் ஆண்டு மாபெரும் போராட்டம் வெடித்தது. எத்தனையோ உயிர்களை பலி கொண்ட அந்த போராட்டம், வரலாற்று அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்று திகழ்கிறது.. குறிப்பாக, தமிழகத்தில் காங்கிரஸை வீழ்த்தி, திமுக ஆட்சியை பிடிக்க இந்த போராட்டம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
கடந்த 1965 ஜனவரி 25ம் தேதி திமுக சார்பில் துக்க நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.. அன்றைய தினம் நடைபெற்ற போராட்டம் உச்சக்கட்ட தீவிரத்தையும் எட்டியது.. பின்னர், அடுத்தடுத்த நாட்களில் போராளிகள், மொழிக்காக தீக்குளித்து கருகினர்.. இந்த போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வருடந்தோறும் வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.
ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது. மொழிப்போர்: எனவே, உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு, வருடந்தோறும் ஜனவரி 25ம் தேதி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வீர வணக்கம் செலுத்துவது வழக்கம். அந்தவகையில் மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.