குமாரபாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

Kumbabishekam in Tamil - குமாரபாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2022-09-08 05:15 GMT

குமாரபாளையத்தில் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி சிவாச்சாரியார் புனித நீரை கலசத்தின் மீது ஊற்றினார்.

Kumbabishekam in Tamil -குமாரபாளையத்தில் தம்மண்ணன் வீதி பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஆகஸ்ட் 19ம் தேதி யாகசாலை கால்கோள் விழாவுடன் துவங்கியது. தீர்த்தக்குட ஊர்வலம், 2 நாட்கள் யாகசாலை பூஜைகள், காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காலை 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா ஓம் சக்தி சரண கோஷத்துடன் நடைபெற்றது. கோபுர கலசங்கள் மீது சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றினார்கள். பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. 2 கருட பகவான்கள் கோயில் மேல் பகுதியில் வட்டமிட்டது பக்தர்களை பரவசமடைய செய்தது.

பெரிய மாரியம்மன் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. . பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. . கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை சாந்த மல்லிகார்ஜுன சுவாமிகள், சாலுரு புருஹன் மாதா, நகரமன்ற சேர்மன் விஜய்கண்ணன், முன்னாள் நகரமன்ற தலைவர் தனசேகரன்,நாட்டாண்மைக்காரர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News