10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ, மாணவியர் சாதனை!
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ, மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.;
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ, மாணவியர் சாதனை
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ, மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி அளவில் முதல் மதிப்பெண், 491, 2வது மதிப்பெண் 488 (இருவர்), 3வது மதிப்பெண் 485 பெற்று சாதனை படைத்துள்ளனர். கணிதம் 7 பேர், அறிவியல் 1, சோசியல் 3 எனும் விதத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 244 பேர் தேர்வு எழுதியதில் 235 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதே போல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அகஸ்தீஸ்வரன் 487 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மணிமாறன் 485, மோஹித் பீனிக்ஸ் 484 எனும் வகையில் இரண்டாம், மூன்றாமிடம் பெற்றனர். கணிதம் 6 பேர், அறிவியல் பாடத்தில் ஒருவர் என 100 மதிப்பெண்கள் பெற்றனர். தேர்வு எழுதிய 261 மாணவர்களில் 233 பேர் தேர்ச்சி பெற்றனர். சாதனை படைத்த மாணவர்கள், தேர்ச்சி பெற வைத்த ஆசிரிய பெருமக்களையும் தலைமை ஆசிரியர் ஆடலரசு வாழ்த்தி பாராட்டினார்.
குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 488 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்த மாணவி பி. யுவஸ்ரீக்கு பெற்றோர் பிரகாஷ், உமா மகேஸ்வரி, தம்பி ஹரிதர்சன், உறவினர்கள் ஜோதிமணி, மணி, ஜீவானந்தம், தீபிகா, அக்சியா, ஹக்சரா உள்பட பலரும் பாராட்டினர்.