குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம் நடந்தது.;
பிரம்ம குமாரிகள் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம், பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தின் சார்பாக நடந்தது.
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம் தலைமை டாக்டர் பாரதி தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தின் சார்பாக பிரம்ம குமாரி சகோதரி தீபிகா பங்கேற்று தியான பயிற்சி வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:
தாய்மார்கள் கவலைகளை மறந்து இருப்பது அவசியம். மேலும் தாயின் கருவறையில் குழந்தையின் வளர்ச்சி தாயின் மனநிலை பொறுத்தே அமைகின்றது. கவலைகளும் கோபங்களும் துக்கங்களும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய காரணமாக மாறுகின்றது. குழந்தை ஆரோக்கியமாகவும், மனவளர்ச்சி முழுமையாகவும் அடைய தாய்மார்கள் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல இசை கேட்க வேண்டும். மகிழ்ச்சியான உணர்வுகளை பரிமாறிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.