பிளஸ் 2 பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ, மாணவியர் சாதனை
பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ, மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.;
குமாரபாளையம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ, மாணவியர் சாதனை பிளஸ் 2 பொதுத் தேர்வில் படைத்துள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி அளவில் முதல் மதிப்பெண், 553, 2வது மதிப்பெண் 541, 3வது மதிப்பெண் 540 பெற்று சாதனை படைத்துள்ளனர். வணிகவியல் படத்தில் இருவர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 159 பேர் தேர்வு எழுதியதில் 154 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதே போல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சங்கர் 561 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், விக்னேஸ்வரன் 551ம், கோகுல், தர்ஷன் இருவரும் 529ம் பெற்றுள்ளனர். வணிகவியலில் சங்கர், விக்னேஸ்வர் இருவரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணினி பயன்பாடு பாடத்தில் சங்கர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
நெசவியலில் மோனிஸ், பார்த்தசாரதி, சூரிய பிரகாஷ், விகாஷ் நால்வரும் 1-00 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய 209 மாணவர்களில் 189 பேர் தேர்ச்சி பெற்றனர். சாதனை படைத்த மாணவர்கள், தேர்ச்சி பெற வைத்த வணிகவியல் ஆசிரியர் மணி, கணினி பயன்பாடு ஆசிரியர் முத்துசாமி, நெசவியல் தொழில்நுட்பம் ஆசிரியர் கார்த்தி, உள்ளிட்ட ஆசிரிய பெருமக்களையும் தலைமை ஆசிரியர் ஆடலரசு வாழ்த்தி பாராட்டினார்.