குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்க விழாவில் மாவட்ட ஆளுநர் பங்கேற்பு

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் மாவட்ட ஆளுநர் வருகை விழா நடைபெற்றது.

Update: 2022-08-31 05:52 GMT

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் நடைபெற்ற மாவட்ட ஆளுநர் வருகை விழாவில் மாவட்ட ஆளுனர் முத்தையா பேசினார்.

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் மாவட்டஆளுநர் வருகை விழா பட்டய தலைவர் ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆளுனர் முத்தையா, மாவட்ட முதல் பெண்மணி சாந்தி பங்கேற்று கல்வி உதவி தொகை, மருத்துவ சிகிச்சை உதவி தொகை, ஆதரவற்றவர்களுக்கு அரிசி மூட்டை, உணவு வழங்கும் திட்டத்தில் சங்கம் சார்பாக கொரோனா காலத்தில் 36 ஆயிரம் நபர்களுக்கு உணவு வழங்கிய முன்னாள் தலைவர் சண்முகசுந்தரத்திற்கு கவுரவ விருது ஆகியவற்றை வழங்கி வாழ்த்தி பேசினார்கள். கண் சிகிச்சை, ரத்த தானம், பொது சிகிச்சை, இருதய சிகிச்சை, குழந்தைகள் சிகிச்சை, மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை உள்ளிட்ட முகாம்கள் நடத்தி சேவை செய்த சங்க நிர்வாகிகளுக்கு விருது வழங்கப்பட்டது. அமைச்சரவை செயலர் செங்கோட்டுவேலு, சங்க தலைவர் மாதேஸ்வரன், செயலர்கள் கோகுல்நாத், சுந்தர்ராஜ், பொருளர் தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News