அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 40 நாற்காலிகள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் 40 நாற்காலிகள் வழங்கினர்.;
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 40 நாற்காலிகள் வழங்கிய முன்னாள் மாணவர்கள் - குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் 40 நாற்காலிகள் வழங்கினர்.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் 40 நாற்காலிகள் வழங்கும் விழா, தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் நடந்தது. இதனையொட்டி பேச்சு, கட்டுரை, ஓவியம், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதில் தலைமையாசிரியர் பேசியதாவது:
மாணவர்கள் படித்து முடித்து சென்ற பின்னும், தான் படித்த பள்ளியை மறக்காமல் இது போல் பள்ளிக்கு தேவையான உதவிகள் செய்து வருவது மகிழ்ச்சி. பல்வேறு துறைகளில் சிறந்து விலங்கு வரும் முன்னாள் மாணவர்கள் மென்மேலும் வளம் பெற வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.