இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் குன்றம் முருகன் கோவிலில் இந்து முன்னணி சார்பாக நடக்க இருந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்திய தமிழக அரசை கண்டித்து, குமாரபாளையம் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2025-02-06 02:45 GMT

இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் குன்றம் முருகன் கோவிலில் இந்து முன்னணி சார்பாக நடக்க இருந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்திய தமிழக அரசை கண்டித்து, குமாரபாளையம் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இந்து முன்னணி சார்பாக நடக்க இருந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்திய தமிழக அரசை கண்டித்தும், திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை கண்டித்தும், இந்து முன்னணியின் சார்பில், மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் உத்திரவின்படி, குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில், நகர தலைவர் பாலாஜி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழக அரசுக்கு எதிராகவும், திருப்பரங்குன்றம் மலைக்கோவிலை யாருக்கும் விட மாட்டோம் என்றும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பங்கேற்ற 14 நபர்களை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.ஆர்பாட்ட த்தில் நகர பொதுச்செயலர் விக்னேஷ், நகர பொருளர் ஜெகந்நாதன், மகர துணை தலைவர் ராஜசேகர், பா.ஜ.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

படவிளக்கம் : 

திருப்பரங்குன்றம் குன்றம் முருகன் கோவிலில் இந்து முன்னணி சார்பாக நடக்க இருந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்திய தமிழக அரசை கண்டித்து, குமாரபாளையம் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

Similar News