குமாரபாளையம் கிரைம் செய்திகள்

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையத்தில் நடந்த விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர்.;

Update: 2024-01-10 16:30 GMT

குமாரபாளையம் கிரைம் செய்திகள் (கோப்பு படம்)

குமாரபாளையம் கிரைம் செய்திகள்

மாட்டை காப்பாற்ற முயன்ற வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

பள்ளிபாளையத்தில் மாட்டை காப்பாற்ற சென்றவர் கால் இடறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்.

பள்ளிபாளையம் சுள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், (19). கூலி. இவர் நேற்றுமுன்தினம் இரவு 07:00 மணியளவில், மாடு மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று, அங்குள்ள கிணற்றில் விழ இருந்ததால், அதனை காப்பாற்ற ஓடி சென்ற போது, கால் இடறி கிணற்றுக்குள் விழுந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில், வெப்படை தீயணைப்பு படையினர் நேரில் வந்து கிணற்றில் விழுந்த ஆறுமுகத்தை மீட்டனர். இவரை பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, இவரை பரிசோதித்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார். இவரது தந்தை அர்த்தனாரி பள்ளிபாளையம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ரோட்டில் நடந்து சென்றவர் கார் மோதியதால் உயிரிழப்பு 

பள்ளிபாளையத்தில் மளிகை கடைக்கு சென்றவர் கார் மோதி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பள்ளிபாளையம் அடுத்துள்ள காடச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன் வயது (53). விசைத்தறி கூலி தொழிலாளியான செங்கோடன், நேற்று முன்தினம் மாலை 06:00 மணியளவில் ஐந்து பனை, தனியார் பள்ளி அருகில், மளிகை கடைக்கு செல்வதற்காக வந்துள்ளார். அப்போது திருச்செங்கோட்டில் இருந்து வேகமாக வந்த கார், எதிர்பாராதவிதமாக இவர் மீது பலமாக மோதியதில், தூக்கி வீசப்பட்டு செங்கோடன் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு, பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் செங்கோடன் உயிரிழந்தார். செங்கோடன் மகன் ரமேஷ் அளித்த புகார் அடிப்படையில், பள்ளிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News