குடித்து பூர்வீக சொத்துக்களை குடித்து அழித்த வேதனையில் கூலி தொழிலாளி தற்கொலை
குமாரபாளையத்தில் குடித்து பூர்வீக சொத்துக்களை குடித்து அழித்த வேதனையில் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;
குடித்து பூர்வீக சொத்துக்களை குடித்து அழித்த வேதனையில் கூலி தொழிலாளி தற்கொலை
குமாரபாளையத்தில் குடித்து பூர்வீக சொத்துக்களை குடித்து அழித்த வேதனையில் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபாளையம் காட்டூர் பகுதியில் வசித்து வந்தவர் பன்னீர்செல்வம், 50. விசைத்தறி தொழில். குடிப்பழக்கம் உள்ள இவர் தனது பூர்வீக இடம் உள்ளிட்ட சொத்துகளை விற்று, குடித்து அழித்தததாக கூறப்படுகிறது. இதனால் சில நாட்களாக மனமுடைந்து இருந்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் உள்ள மனைவி துளசி, 33, உள்ளிட்ட அனைவரும் தூங்கிய நிலையில், நேற்று காலை 06:30 மணியளவில் எழுந்து பார்த்த போது, பன்னீர்செல்வம், வீட்டின் சமையலறையில் புடவையால் தூக்கு மாட்டிய நிலையில் தொங்கியுள்ளார். தனியார் ஆம்புலன்ஸ் மூலம் இவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது, அவர் இறந்து விட்டதாக, டாக்டர் கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.