குமாரபாளையத்தில் கமல் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் கமல் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-11-07 12:45 GMT

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெற்ற கமலஹாசன் பிறந்தநாள் விழாவில் போலீஸ் எஸ்.ஐ. மலர்விழி பங்கேற்று பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி சார்பில் கட்சியின் நிறுவனர் கமலஹாசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மகளிரணி நகர செயலர் சித்ரா தலைமை வகித்தார். போலீஸ் எஸ்.ஐ. மலர்விழி பங்கேற்று பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். மாவட்ட செயலர் காமராஜ் இனிப்புகள் வழங்கினார். தொழிலாளர் அணி மாவட்ட செயலர் செல்வராஜ் கட்சிக்கொடியேற்றி வைத்தார். நிர்வாகிகள் ரேவதி, உஷா, விமலா உள்பட பலர் பங்கேற்றனர்.

சுந்தரம் நகர் பகுதியில் நடைபெற்ற விழாவில் மகளிரணி நிர்வாகி உஷா தலைமை வகித்தார். மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. துணை செயலர் சிவகுமார், மாவட்ட பொருளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.

பெரியார் நகர் பகுதியில் நடைபெற்ற விழாவில், கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மகளிரணி ஒன்றிய அமைப்பாளர் சொர்ணாம்பாள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நகரில் உள்ள 33 வார்டுகளில் கட்சி கொடியேற்றி வைக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.

கமலஹாசன் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக 30 ஆண்டுகளுக்கு முன்பே மாற்றினார். நற்பணி மன்றம் கண் சிகிச்சை முகாம், ரத்த தான முகாம், உடல் தான முகாம் உள்ளிட்ட பொது மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. மற்றவர்களுக்கு முன்னுதாரனமாக கமல்ஹாசன் தனது உடலை தானமாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களில் களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் 2 வரை ஆவர் ஏற்காத கதாபாத்திரமே இல்லை எனும் அளவிற்கு அனைத்து கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவரது படங்கள் உலக அளவில் வெளியிடப்பட்டு வெற்றி பெற்றதால், உலக நாயகன் என்ற சிறகப்பு பெயரும் உண்டு. மக்கள் நீதி மய்யம் எனும் அரசியல் கட்சி தொடங்கி மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் அன்பை பெற்று வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை பகுதியில் போட்டியிட்டு, பா.ஜ.க. வேட்பாளருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். தொடர்ந்து முன்னிலையில் இருந்த அவர், இறுதி கட்டத்தில் சிறிது பின்னடைவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

கிராம சபா கூட்டங்கள் முன்பு எல்லாம் கடமைக்கு நடத்தப்பட்டு வந்தது. அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கிராம சபா கூட்டத்தை கையில் எடுத்து, மாநிலம் முழுதும் பிரச்சாரம் செய்து, பொதுமக்களை கிராம சபா கூட்டங்களில் பங்கேற்றக வைத்தார். திட்டங்கள், அதற்கான செலவினங்கள் குறித்து பேச வைத்தார். தற்போது புது பொலிவுடன் கிராம சபா கூட்டங்கள் நடைபெற்று வருவது கமலின் பிரசாரத்தால் என்றால் அது மிகையல்ல. இதனை பின் தொடர்ந்து கிராம சபா கூட்டங்கள் போல் நகர சபை கூட்டங்களும் நடக்க வேண்டும் என பிரச்சாரம் செய்தார். தற்போது அனைத்து நகராட்சியிலும் பகுதி சபா கூட்டங்கள் என, நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும், அந்தந்த பகுதி பொதுமக்களை பங்கேற்க வைத்து நடைபெற்றது என்றால், அதற்கு கமல் பிரசாரமும் ஒரு காரணம்.

மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு, கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, மாணவர்களுக்கு ஆட்சியாளர்கள் உதவ வேண்டும், மாணவர்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என கூறினார். மரக்கன்று நடுதலை நற்பணி மன்றம் தொடங்கிய காலத்தில் இருந்தே ஊக்குவித்து வருகிறார்.

Tags:    

Similar News