வாகனத்தில் அடிபட்டு மயில் இறப்பு? வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை

நாமக்கல் மாவட்டம், வெப்படை அருகே வாகனத்தில் அடிபட்டு மயில் இறந்ததாக பரவிய தகவல் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-06-12 14:15 GMT
குமாரபாளையம், வெப்படை அருகே அடிபட்டு இறந்து கிடந்த தேசியப்பறவை மயில்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம்,வெப்படை அருகே வாகனத்தில் அடிபட்டு தேசியப்பறவையான மயில் இறந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வெப்படை அருகே சங்ககிரி சாலையில் மயில் ஒன்று அடிபட்டு இறந்து கிடந்தது. இது வாகனத்தில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்றும் பரபரப்பு எழுந்தது. இதனால் சுற்றுவட்டார கிராம மக்கள் அந்த மயில் உடலை வந்து பார்த்து சென்றனர்.

பொதுமக்களில் சிலர் மொபைல் போனில் புகைப்படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தேசிய பறவை என்பதால் மயில் உயிரிழந்து கிடந்தது தொடர்பாக வெப்படை காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது இதைத்தொடர்ந்து,. வெப்படை காவல்துறையினர் நாமக்கல் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதன்பேரில், வனக்காப்பாளர் சரவண பெருமாள் நேரில் வந்து மயிலின் உடலை எடுத்து சென்றார். தேசிய பறவை என்பதால் உரிய அரசு மரியாதையுடன் மயில் உடல் அடக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குடிபோதையில் யாராவது மயில் மீது வாகனத்தை ஏற்றிச் சென்றனரா? என்பது குறித்தும் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் வனவிலங்கு ஆர்ர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News