சபரிமலை சேவைக்கு கல்லூரி மாணவர்கள் 55 பேர் அனுப்பி வைப்பு
சபரிமலை சேவைக்கு கல்லூரி மாணவர்கள் 55 பேரை ஐயப்ப சேவா சங்கத்தினர் வழியனுப்பி வைத்தனர்;
சபரிமலை சேவைக்கு கல்லூரி மாணவர்கள் 55 பேரை ஐயப்ப சேவா சங்கத்தினர் வழியனுப்பி வைத்தனர்.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தை மாத பிறப்பு வரை, கேரள மாநிலம் சபரிமலை சன்னிதானத்தில் ஐயப்ப சுவாமியை தரிசிக்க பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். மகர விளக்கு காலத்தில் அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்திட வேண்டி, கல்லூரி மாணவர்கள் பல கட்டங்களாக ஆயிரத்திற்கும் மேலானவர்கள் அனுப்பி வைப்பது வழக்கம். குமாரபாளையம் ஜெட் திருமண மண்டபத்தில் இருந்து சபரிமலை சேவைக்கு சேவா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் 55 பேர் சேவை செய்ய அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை வழியனுப்பும் விழா மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் நடைபெற்றது.
ஐயப்பா சேவா சங்க மாவட்ட செயலர் ஜெகதீஸ் கூறியதாவது: அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்திட வேண்டி, கல்லூரி மாணவர்கள் பல கட்டங்களாக ஆயிரத்திற்கும் மேலானவர்கள் அனுப்பி வைப்பது வழக்கம். இவர்கள் ஐயப்ப பக்தர்களுக்கு மூலிகை குடிநீர் வழங்குதல், அன்னதானம் வழங்குதல், அவசர சிகிச்சை வழங்குதல், பிராணவாயு அறையில் ஆக்சிஜன் கொடுத்தல், உயிர் நீத்தாரை அவரது உடலை சொந்த ஊரில் கொண்டு போய் சேர்த்தல், புண்ணிய பூங்காவனம் எனப்படும் ஐயப்பன் கோவில் வளாகம் முழுதும் தூய்மை படுத்தும் பணி செய்தல், என்பது உள்ளிட்ட பணிகள் செய்வார்கள். 3ம் கட்டமாக திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், ஐயப்ப சங்கத்தினர் உள்பட 55 பேர், 11 நாட்கள் சேவை செய்து திரும்புவார்கள். அதன் பின் அடுத்த குழுவினர் செல்வார்கள் இவ்வாறு அவர் கூறினார். இதில் மத்திய மாநில துணை தலைவர் பாலசுப்ரமணி, மாவட்ட பொருளாளர் செங்கோட்டையன், மாவட்டகண்காணிப்பாளர் பிரவீன்காந்த், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர் சார்பில் சபரிமலை அன்னதானத்திற்கு 5 லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தை மாத பிறப்பு வரை, கேரள மாநிலம் சபரிமலை சந்நிதானத்தில் ஐயப்ப சுவாமியை தரிசிக்க பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். மகர விளக்கு காலத்தில் அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்திட வேண்டி, கல்லூரி மாணவர்கள் பல கட்டங்களாக ஆயிரத்திற்கும் மேலானவர்கள் அனுப்பி வைப்பது வழக்கம்.
முதற்கட்டமாக 75 நபர்கள் கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நேற்று சபரிமலை அன்னதானத்திற்காக 5 லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான விழாவில் மாவட்ட தலைவர் பிரபு, மாவட்ட செயலர் ஜெகதீஷ், கண்காணிப்பாளர் பிரவீன்காந்த், தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி, முகாம் அலுவலர் வழக்கறிஞர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.