ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை மற்றும் ஓட்டுனர் அடையாள வில்லைகளை வழங்கிய முன்னாள் அமைச்சர்
குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை மற்றும் ஓட்டுனர் அடையாள வில்லைகளை முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி வழங்கினார்.;
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை மற்றும் ஓட்டுனர் அடையாள வில்லைகளை வழங்கிய முன்னாள் அமைச்சர்
குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை மற்றும் ஓட்டுனர் அடையாள வில்லைகளை முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி வழங்கினார்.
குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் கற்பக விநாயகர் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினருக்கு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளையொட்டி ஆட்டோ ஓட்டுநர்கள் 70 பேருக்கு காக்கி சீருடையும், ஓட்டுநர் அடையாள வில்லையும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி பங்கேற்று, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடையினையும், ஓட்டுநர் அடையாள வில்லைகளையும் வழங்கினார். முன்னதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட ஐந்தாவது வார்டு பகுதியில் நடைபெற்ற கோல போட்டியில் முதல் பரிசு பெற்றவருக்கு தங்க மூக்குத்தியும், இரண்டாம் பரிசு பெற்றவருக்கு வெள்ளி நாணயமும், மூன்றாம் பரிசு பெற்றவருக்கு குத்துவிளக்கு உள்ளிட்டவற்றை முன்னாள் அமைச்சர் தங்கமணி வழங்கினார்.
நகர செயலர் பாலசுப்ரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.
படவிளக்கம் :