குமாரபாளையம்; நாட்டியத்தில் அசத்திய ரஷ்யா கலைஞர்கள்
குமாரபாளையத்தில் நடந்த நாட்டிய நிகழ்ச்சியில் ரஷ்யா கலைஞர்கள் அசத்தினர்.;
குமாரபாளையத்தில் நடந்த நாட்டிய நிகழ்ச்சியில் ரஷ்யா கலைஞர்கள் அசத்தினர்.
இந்தியா, ரஷ்யா கலாச்சார வளர்ச்சிக்காக குமாரபாளையத்தில் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் ரஷ்யா நாட்டு நடன கலைஞர்கள் பல்வேறு விதமான நாட்டியங்கள் ஆடி, பார்வையாளர்களை அசத்தினர்.
இது குறித்து விசைத்தறி சம்மேளன தலைவர் மதிவாணன் கூறுகையில், இந்தியா, ரஷ்யா உறவு நல்லுறவாக நீடிக்கவும், கலாச்சார வளர்ச்சி பெறவும் இந்த நடன நிகழ்ச்சி நடந்தது. இந்த குழுவினர் ஆண்டுதோறும் வந்து நிகழ்ச்சி நடத்தி வருகிறார்கள். தமிழ் பாடல் ஒன்றுக்கு நடனமாடியது பெரும் வரவேற்ப்பை பெற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய, ரஷ்யா வர்த்தக சபை பொது செயலர் தங்கப்பன் கூறியதாவது:
ரஷ்யாவில் இருந்து பொருட்கள் கடல் வழியாக குறுகிய காலத்தில் கொண்டுவரும் விதமாக, நாளை சென்னையில் ராசா அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இது வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் ஆகும். இதனால் கடல்வழி போக்குவரத்து நேரம் குறையும். ஏறி பொருள் மீதமாகும். வியாபாரம் மென்மேலும் பெருகும். ரஷ்யா, இந்தியா கலாச்சாரம் வளர்ச்சி பெறும்.
இதுவரை கடல்வழி போக்குவரத்து காலம் 40 நாட்களாக இருந்தது. தற்போது பேச்சுவார்த்தைக்கு பின் அது 25 நாட்களாக குறையவுள்ளது. சிறு தொழில் மேலும் வளர்ச்சி பெறும். வேலை அவயுபு அதிகரிக்கும். இந்த ரஷ்ய கலாச்சார நடன நிகழ்ச்சியின் இறுதி நாள் நிகழ்ச்சி சென்னை வாணி மகாலில் பிப். 2ல் நடக்கவுள்ளது. இதில் இசை அமைப்பாளர் இளையராஜா பங்கேற்க உள்ளார். இந்த குழுவினர் 13 நாட்கள் நிகழ்ச்சி நடத்த வந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.