குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் சாதனை

மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2022-10-17 17:15 GMT

மாவட்ட அளவிலான, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியரை கல்லூரி முதல்வர் பாராட்டினார்.  

நாமக்கல் நேரு யுவகேந்திரா சார்பில், மாவட்ட அளவிலான பட்டிமன்றம், பேச்சு, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. நாமக்கல் மாவட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் பட்டிமன்றம், நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள் தியானேஷ், நிவேதா, சுவாதி உள்ளிட்ட பலர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை முதல்வர் ரேணுகா உள்ளிட்ட பேராசிரியர் ரகுபதி உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி முன்பு, அப்பகுதி மக்கள் குப்பைகளை மலைபோல் கொட்டி வந்தனர். இதனை அகற்ற ஊராட்சி நிர்வாகம், அப்பகுதி பொதுமக்களிடம் பலமுறை சொல்லியும் பலனில்லை. இதனால் கல்லூரி முன்பு குப்பைகள் கொட்டாதிருக்க, அங்குள்ள குப்பைகளை அகற்றி, அந்த இடத்தில் மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஞானதீபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போலீசார் சார்பில், விழிப்புணர்வு முகாம் முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது. எஸ்.ஐ. மலர்விழி பங்கேற்று 'காவலன்' செயலியை அனைத்து மாணவ, மாணவியரும் பதிவிறக்கம் செய்வது குறித்து செயல்முறை விளக்கம் கொடுத்து, அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கமாக கூறினார். மேலும் போதை பொருட்களின் விளைவுகள், அதனால் ஏற்படும் விபத்துகளின் பாதிப்புகள், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தும் எடுத்துரைத்தார். மாணாக்கர்கள் அனைவரும் 'காவலன்' செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டனர்.

முதல்வர் ரேணுகா பேசியதாவது:

இந்த 'காவலன்' செயலி என்பது மாணவர்களுக்கும் பயன்படக்கூடியது. பைக், கார் வைத்திருக்கும் மாணவர்களை நோட்டமிட்டு சில விஷமிகள் அழகான பெண்களை உங்களுடன் பேச வைத்து, அவர்கள் மூலமாக உங்கள் உடைமைகளை திருட செய்வார்கள். அப்போது இந்த செயலியை பயன்படுத்தி உதவி பெறலாம், என்றார்.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகிறார்கள். பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், பி.காம்., பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகள் உள்ள நிலையில், மாணாக்கர்களுக்கு காலை ஒரு பேட்ச், மாலை ஒரு பேட்ச் என சிப்ட் முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இது பேராசிரியர்களுக்கும் கூடுதல் பணி சுமை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனால் சில மாணாக்கர்கள் கல்லூரி செல்வதாக கூறி வழக்கம்போல் வீட்டிலிருந்து சென்று விடுகிறார்கள். ஆனால் சினிமா, உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. போதிய வகுப்பறை இல்லாததால் இது போன்று சிப்ட் முறையில் வகுப்புகள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. தமிழக பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்ததாக கூறப்படும் நிலையில், இது போன்ற அத்தியாவசியமான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து மாணவர்களின் எதிர்காலத்திற்கு உதவலாம். இன்னும் 20 வகுப்பறைகளாவது தேவை எனும் நிலை இருந்து வருகிறது. ஓரிரு நாளில் நடப்பு ஆண்டிற்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதில் மேலும் பல நூறு மாணவர்கள் சேர உள்ளனர். அவர்களுக்கும் கூடுதலாக வகுப்பறைகள் தேவைப்படும் நிலை உள்ளது.

Similar News