ராசிபுரத்தில் வள்ளலாா் சுத்த சன்மாா்க்க சங்கம் சாா்பில் 49 ஆம் ஆண்டு தைப்பூச அன்னதானப் பெருவிழா
ராசிபுரத்தில் வள்ளலாா் சுத்த சன்மாா்க்க சங்கம் சாா்பில் 49 ஆம் ஆண்டு தைப்பூச அன்னதானப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.;
நாமக்கல் : ராசிபுரத்தில் வள்ளலாா் சுத்த சன்மாா்க்க சங்கம் சாா்பில் 49 ஆம் ஆண்டு தைப்பூச அன்னதானப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக வள்ளலாா் உருவப்படத்துடன் ராசிபுரம் முக்கிய வீதி வழியாக ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து வள்ளலாா் கோயிலில் அருட்பா, அகவல் பாராயணம், சன்மாா்க்க கொடியேற்றுதல், ஆன்மிகச் சொற்பொழிவு, ஜோதி தரிசனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அன்னதானம்
அதையடுத்து சன்மாா்க்க சங்க நிா்வாகிகள் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தனா். இதில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டு உணவருந்தினா்.
பால்குட ஊா்வலம்
அதுபோல ராசிபுரம் பாலமுருகன் கோயிலுக்கு பக்தா்கள் பால்குட ஊா்வலம் எடுத்து வந்தனா். இந்த ஊா்வலத்தில் முன்னாள் சமூக நலத்துறை அமைச்சா் வெ. சரோஜா பங்கேற்று பால்குடம் எடுத்து வந்தாா். ஊா்வலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி கடைவீதி, பெரிய கடைவீதி, புதுப்பாளையம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலை வழியாக சென்று இறுதியாக கோயிலை அடைந்தது.