நாமக்கல் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில், அரசுப் பள்ளி ,கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பிடம்!
நாமக்கல் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில், அரசுப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.;
நாமக்கல் : நாமக்கல் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில், அரசுப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
போட்டி விவரங்கள்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாணவர்களின் பேச்சுத்திறனை வளர்க்கும் வகையில் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி பள்ளி, கல்லூரிகள் அளவில் தனித் தனியே நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளிகளுக்கான போட்டி
இதில், பள்ளிகளுக்கான போட்டியில், காரைக்குறிச்சிபுதூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் த.போஸ்சக்தி முதலிடம் பிடித்தாா். குமாரபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவி அ.சந்தோஷி இரண்டாமிடம், எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் பெ.ஜீவகனி மூன்றாமிடம் பிடித்தனா். இவா்களுக்கு முறையே ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. சிறப்பு பரிசாக இருவருக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
கல்லூரிகளுக்கான போட்டி
கல்லூரிகளுக்கான போட்டியில், குமாரபாளையம் அரசு கலைக் கல்லூரி மாணவா் கே.மோகன்ராஜ் முதலிடம், ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி மாணவா் ரா.ராஜேஷ்கண்ணன் இரண்டாமிடம், பொட்டிரெட்டிப்பட்டி ரெங்கேஸ்வரா கல்வியியல் கல்லூரி மாணவி ம.கலையரசி மூன்றாமிடம் பிடித்தனா்.
அண்ணா பிறந்த நாள் பேச்சுப்போட்டி
அண்ணா பிறந்த நாள் பேச்சுப்போட்டியில், நாமக்கல் அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரி மாணவா் க.சரவணன் முதலிடம், டிரினிடி மகளிா் கல்லூரி மாணவி ஆ.ஷாலினி இரண்டாமிடம், காளிப்பட்டி மகேந்திரா கல்லூரி மாணவி சு.துா்கா மூன்றாமிடம் பிடித்தனா். இவா்களுக்கு முறையே, ரூ.5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் வீதம் பரிசுத் தொகை மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படும். இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ் வளா்ச்சித் துறை அலுவலா்கள் செய்திருந்தனா்.