நாகையில் கொரோனா நிவாரணம் வழங்க டோக்கன் வழங்கும் பணி துவங்கியது

நாகை மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைத்தாரர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்க டோக்கன் வழங்கும் பணி துவங்கியது.

Update: 2021-05-10 12:45 GMT

கொரோனா ஊரடங்கு காரணமாக நிவாரண நிதி 4000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி முதல் தவணையாக  2 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியை தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார்.

நாகை மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கியது. ஒருங்கிணைத்த நாகை மாவட்டத்தில் உள்ள 785 நியாய விலை கடைகளிலும், வீடுகளிலும் டோக்கன் விநியோகம் செய்யும் பணிகளில் ரேஷன் கடை ஊழியர்கள் காலைமுதல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம் என மாவட்டம் முழுவதும் சுமார் 4 லட்சத்து 78 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு முதல் தவணையாக வருகின்ற 15 ஆம் தேதி 2000 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் தெரிவித்துள்ளார்.

வருகின்ற 15 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதிக்குள் மாவட்டம் முழுவதும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட உள்ளதால் டோக்கன் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News