நாகை துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

Update: 2021-04-03 08:00 GMT

நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அந்தமான் போர்ட் பிளேரில் இருந்து வட கிழக்காக 40கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடகிழக்கு திசையில் மியான்மர் கரை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் தொலைதூரத்தில் புயல் உருவாகியுள்ளதை குறிக்கும் வகையில் துறைமுகத்தில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Tags:    

Similar News