குமாரபாளையத்தில் பணம் வைத்து சூதாடிய 30 பேர் கைது
குமாரபாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிய நபர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.2 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.;
திருச்செங்கோடு டி.எஸ்.பி. அதிரடி நடவடிக்கையால், குமாரபாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிய நபர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டதுடன் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேற்கு காலனி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக, திருச்செங்கோடு டி.எஸ்.பி. இமயவரம்பனுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நேற்று அதிகாலை 01:00 மணியளவில் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், உள்ளிட்ட போலீசாருடன், சம்பவ இடத்தை சுற்றி வளைத்த போலீசார், அங்கு பல குழுக்களாக சீட்டுக்கட்டு வைத்து மங்காத்தா, உள்ளே, வெளியே என பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த 31 நபர்களில் 30 நபர்களை கைது செய்தனர். அதில் செந்தில் என்பவர் தப்பியோடி தலைமறைவானார். சம்பவ இடத்தில் பணம் ஒரு லட்சத்து, 90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சூதாட்டத்தில் 30பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.