இரவு ஊரடங்கு- வேளாங்கண்ணி ஆலயம், நாகூர் தர்கா வெறிச்சோடியது, பேராலயம்,

Update: 2021-04-21 05:30 GMT

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரவு நேர முழு ஊரடங்கால் உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் வெறிச்சோடியது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் நேற்றிரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 4 மாநில எல்லை சோதனை சாவடிகள், 3 மாவட்ட எல்லை சோதனை சாவடிகளில் மாவட்ட காவல்துறை சார்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் தமிழக எல்லையான வாஞ்சூர் சோதனைச்சாவடி வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் தினமும் இரவு நேரங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் தங்கி வந்த நிலையில் இரவு நேர ஊரடங்கால் நாகூர் தர்கா வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய முகப்பு மற்றும் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன், கடற்கரைக்கு மக்கள் செல்வதை தடுக்கும் வகையில் கடற்கரை பாதை கயிறு கட்டப்பட்டு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், நாகை புதிய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டதுடன், அங்கு இருந்த கடைகளை வர்த்தகர்கள் அவசர அவசரமாக அடைத்தனர்.

Tags:    

Similar News