நாகப்பட்டினம் கடற்கரையை ரூ.10 கோடியில் மேம்படுத்த நடவடிக்கை

நாகப்பட்டினம் கடற்கரையை ரூ.10 கோடியில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

Update: 2021-10-29 17:05 GMT

நாகப்பட்டினத்தில் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து துறை அலுவலர்கள் கூட்டம் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், பொதுப்பணித் துறை நெடுஞ்சாலைத் துறை ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களுக்கு பாதிப்பின்றி மக்களை பாதுகாக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், பேரிடர் காலத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப மக்களுக்கு உதவுவது குறித்தும், கழிவு நீர் தேங்கினால் அதனை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும், வடகிழக்கு பருவ மழை முடியும் வரை அனைத்து அதிகாரிகளும் எச்சரிக்கையாகவும் , முன்னேற்பாடாகவும் இருக்க வேண்டும் என உத்தரவிட பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் நாகப்பட்டினம் கடற்கரையை மேம்படுத்த சுற்றுச்சூழல் துறை மூலம் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீலக்கொடி சான்றிதழ் கடற்கரையாக மாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Tags:    

Similar News