நாகை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் மேலும் 5 வட்டாரங்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2021-09-22 13:55 GMT

நாகை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கான வாகனத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் வேதாரண்யம் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தலைஞாயிறு, திருப்பூண்டி, தேவூர், வடுகச்சேரி, மற்றும் திருமருகல் ஆகிய 5 வட்டாரங்களுக்கான மக்களை தேடிமருத்துவம் திட்ட வாகன தொடக்க விழா நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இத்திட்டத்தில் 17263 இரத்தக்கொதிப்பு நோயாளிகள், 8291 நீரிழிவு நோயாளிகள், உள்ளிட்ட 31021 நோயாளிகள் பயன்பெறுவார்கள் எனவும், மேலும் இத்திட்டத்தின் மூலம் வீடுவிடாக சென்று சிகிச்சை அளிக்க உள்ளதாக என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.

Tags:    

Similar News