நாகையில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணிகள் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு முதற்கட்ட நிவாரண நிதி இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் பணிகள் தொடக்கம்.

Update: 2021-05-15 06:00 GMT

கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் நிவாரண நிதி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து முதற்கட்ட தவணையாக நாகையில் இன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகப்பட்டினம் பொதுப்பணியாளர் கூட்டுறவு பண்டகசாலை முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் கட்ட தவணையாக 2000 ரூபாய் நிவாரண நிதியை வழங்கினார்.

பின்னர் கூறிய ஆட்சியர் பிரவீன் நாயர் மாவட்டம் முழுவதும் 95% டோக்கன் வழங்கும் பணி முடிவுற்று உள்ளதாகவும், நாகை வேதாரண்யம் கீழ்வேளூர் திருக்குவளை ஆகிய நான்கு தாலுகாவில் உள்ள 356 நியாயவிலை கடைகளில் 2 லட்சத்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் 2000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் நாகை மாலி திமுக மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News