நாகையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் மனித சங்கிலி போராட்டம்

திருத்தி அமைக்கப்பட்ட வேளாண் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Update: 2021-08-09 11:20 GMT

மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயி சங்கத்தினர்.

திருத்தி அமைக்கப்பட்ட வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகையில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. நாகை வட்டாட்சியர் அலுவலக சாலையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில், 200க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், நூறு நாள் வேலைத்திட்டத்தை 200 நாளாக அறிவிக்க வேண்டும் என்றும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை தடுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Tags:    

Similar News