நாகையில் இந்து மகா சபா சார்பில் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு

கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருக்கும் ஆலயங்களில் திருப்பணியை உடனே தொடங்கி, கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை.

Update: 2022-01-24 14:00 GMT

நாகையில் அகில பாரத இந்து மகா சபா சார்பில்,  இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. 

இந்து சமய அறநிலையத்துறை தஞ்சை மண்டலத்தில் இருந்து,  நாகை மண்டலம் பிரிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் நாகை மண்டல இணை ஆணையராக,  தஞ்சை மண்டல இணை ஆணையர் பொறுப்பு வகித்து வருகிறார். இதனால் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கோயில்களின் வளர்ச்சிப்பணி பாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இரு மாவட்டங்களில் கோவில் சொத்துகள் கொள்ளையடிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டியும், பல கோயில்களில் இதுவரை கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது போன்ற கோரிக்கைகளை முன் வைத்தும்,  இந்து மஹா சபை அமைப்பினர், இன்று கோரிக்கை மனு அளித்தனர். நாகை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் வந்த அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராமநிரஞ்சன் தலைமையில்  அதிகாரிகளிடம்  மனு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News