லாரி மோதி வங்கி சுவர்கள் இடிந்து சேதம்

Update: 2021-04-14 07:45 GMT

நாகப்பட்டினம் அருகே காவலர் ஓட்டி வந்த லாரி மோதி வங்கி கிளையின் சுவர்கள் இடிந்து சேதம் அடைந்தது.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரம் பகுதியை சேர்ந்த கருணாகரன் என்ற இளைஞர் மோட்டார்பைக்கில் சென்றபோது பனங்குடி சாலையில் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடந்த இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுனர் தப்பியோடிய நிலையில் அளவுக்கு அதிகமாக நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் லாரியை காவல் நிலையம் எடுத்து வந்த காவலர் , நாகூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட கிளையின் சுவரில் அதிவேகமாக மோதினார். இந்த விபத்தில் வங்கி கிளையின் முன்பக்க சுவர் மற்றும் கதவுகள் சேதம் அடைந்தது. தொடர்ந்து வங்கியில் அலாரம் ஒலித்ததால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வங்கியை சேதப்படுத்திய லாரியை மீட்ட போலீசார் மீண்டும் காவல் நிலையத்திற்கு ஓட்டி சென்றனர்.

Tags:    

Similar News