விவசாயி மரணத்திற்கு முதல்வரே பொறுப்பு -தயாநிதிமாறன்

Update: 2021-01-24 05:00 GMT

தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த விவசாயி மரணத்திற்கு தமிழக முதல்வர் தான் பொறுப்பேற்க வேண்டும் என நாகையில் தயாநிதிமாறன் எம்.பி., கூறினார்.

நாகப்பட்டினம் சட்டயப்பர் மேல வீதி பகுதியை சேர்ந்த விவசாயி ரமேஷ்பாபு. இவர் திருக்குவளையை அடுத்துள்ள மோகனாம்பாள்புரம் கிராமத்தில் உள்ள தனது 10 ஏக்கர் சம்பா சாகுபடி நெற்பயிர் நீரில் மூழ்கியதால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ரமேஷ்பாபு வீட்டிற்கு நேரில் வந்த திமுக எம்.பி, தயாநிதிமாறன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன் கூறுகையில், தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரச்சனைகளை நினைக்காமல் சதவிகித அடிப்படையில் இழப்பீடு அறிவித்ததால், மன உளைச்சலில் விவசாயிகள் இதுபோன்ற முடிவை எடுத்து இருப்பதாகவும் விவசாயி மரணத்திற்கு முதல்வர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

விவசாயிகள் கேட்ட இழப்பீட்டு தொகையான ஏக்கர் ஒன்றிற்கு 30 ஆயிரம் ரூபாய் கொடுத்திருந்தால் விவசாயி உயிரிழப்பை தவிர்த்து இருக்கலாம் என்று கூறிய தயாநிதி மாறன், முதல்வரை போலி விவசாயி என்று விமர்சித்தார். இதுபோன்ற விபரீத முடிவை எடுக்காமல் விவசாயிகள் மூன்று மாதம் காத்திருந்தால் திமுக ஆட்சி வந்தவுடன் விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

Tags:    

Similar News