மதுரை மாட்டுத்தாவணி அருகே டைட்டல் பார்க்: வியாபாரிகள் எதிர்ப்பு

முதலமைச்சரை நேரில் சந்திக்க அனுமதி வேண்டி மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு கடிதம்;

Update: 2023-01-07 16:15 GMT

பைல் படம்

மதுரையில் டைடல் பார்க் அமைக்க தேர்வு செய்யப்பட்ட  இடம் தொடர்பாக   முதலமைச்சரை நேரில் சந்திக்க அனுமதி வேண்டி மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளனர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டும் ஐ.டி துறை வேகமாக வளர்ந்துள்ளது. ஆனால் பின் தங்கிய மாவட்டங்களுக்கு ஐ.டி நிறுவனங்கள் குடியேறுவது மிகவும் குறைவு. இந்நிலையில் தென் மாவட்டங்களில் முக்கிய நகரமான மதுரையில் ஐ.டி தொழிலை மேம்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தலா 600 கோடி வீதம் இரண்டு டைடல் பார்க் 10 ஏக்கரில் அமைக்கும் திட்டத்தை முதல்வர் அறிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்புத்தெரிவத்து  மதுரை மாட்டுத்தாவணி பகுதி வியாபாரி சங்கம் எதிர்ப்பு தெரிவித்து முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். தற்போது மாட்டுத்தாவணி பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் நிரந்தர காய்கறி சந்தை அமைப்பதற்கு 2010-ஆம் ஆண்டு அரசாணை வெளியீடு செய்யப்பட்டது என வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

மாட்டுத்தாவணி பகுதியில் இருக்கக்கூடிய 27 ஏக்கர் நிலத்தில் 85 கோடி ரூபாய் மதிப்பில் நிரந்தர காய்கறி அங்காடி தவிர மற்ற கட்டுமானங்கள் கட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகவும் வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் அத்தியாவசிய தேவையாக இருக்கக்கூடிய காய்கறி சந்தை அமைப்பது குறித்து தேர்தலுக்கு முன்பாக உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சரை நேரில் சந்தித்து எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த அனுமதி அளிக்க வேண்டும் என வியாபாரி சங்கத்தினர் முதல்வருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News