அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் சஷ்டி விழா தொடக்கம்..!
முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது.;
முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது.
அலங்காநல்லூர்:
பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவில்அழகர் மலை உச்சியில் உள்ளது.இங்கு ஆண்டுதோறும் கந்த சஷ்டி பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலையில் இக் கோவிலில்பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். இதில் முன்னதாக சுவாமிக்கு சண்முகா அர்ச்சனையும் யாகசாலை பூஜைகளும் மகா அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து அன்ன வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க தீவட்டி பரிகாரம்களுடன்சுவாமி புறப்பாடல் நடைபெற்றது. மாலையிலும் சண்முகா அர்ச்சனை நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சஷ்டி மண்டபத்தில் அமர்ந்து காப்பு கட்டி விரதங்களை தொடங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம் இணை ஆணையாளர் செல்லத்துரை மற்றும் அறங்காவலர்கள் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதில் ,வருகிற ஏழாம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நடைபெறுகிறது 8 ம் தேதி திருக்கல்யாணம் மற்றும் பல்லாக்கு வாகனமும் ஊஞ்சல் சேவையும் மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறும். இத்துடன் 7நாள் நடைபெற்ற கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது.