சோழவந்தான் அருகே மருதுபாண்டியர் குரு பூஜை..!
சோழவந்தான் அருகே, முள்ளிபள்ளத்தில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை விழா நடந்தது.;
சோழவந்தான் அருகே, முள்ளிபள்ளத்தில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை விழா நடந்தது.
சோழவந்தான்.
மதுரை அருகே,சோழவந்தான் , முள்ளிப்பள்ளம் கிராமத்தில் மாமன்னர் மருதுபாண்டியரின் குருபூஜை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு,மருது சகோதரர்கள் திருவுருவப்படத்திற்கு, மரியாதை செய்யப்பட்டது.
திமுக ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் கலந்து கொண்டு, மரியாதை செய்தார்.இதில், அகமுடையார் சங்கத் தலைவர் கிருஷ்ணன் என்ற கிட்டு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மார்நாட்டான், ஊராட்சி மன்றத்துணைத் தலைவர் கேபிள் ராஜா, தெய்வேந்திரன், பொருளாளர் குமார், செல்லமுத்து முத்து, இருளன், அண்ணாமலை, முத்தையா, அகமுடையார் உறவின்முறை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் மருது பாண்டியர்கள் தூக்கிலிட்டப்பட்ட தினமான அக்டோபர் 24 ஆம் தேதி மருது பாண்டி சகோதரர்களின் நினைவு தினம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மருது சகோதரர்களின் சொந்த ஊரான காளையார்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள அவர்களது சமாதியில் அக்டோபர் 27ம் தேதி குருபூஜை விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.