மதுரையில் குடியரசு நாள்: கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்
அரசு திட்டங்களின் கீழ் 37 பயனாளிகளுக்கு ரூ.. 28,21,868 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்;
மதுரை மாநகர காவல்படையினர் பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற 74- ஆவது குடியரசு தின விழாவில் நடைபெற்ற பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி
மதுரை மாநகர காவல்படையினர் பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற 74- ஆவது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், தேசிய கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
மதுரை மாநகர காவல்படையினர் பயிற்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக இன்று (26.01.2023) நடைபெற்ற 74-ஆவது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தின விழா மதுரை மாநகர காவல்படையினர் பயிற்சிமைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில்,மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை கௌரவிக்கும் விதமாக பொன்னாடை போர்த்தினார்.
மேலும், விழாவில், அரசு திட்டங்களின் கீழ் 37 பயனாளிகளுக்கு ரூ.. 28,21,868 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், 217 காவல் துறை அலுவலர்களுக்கு, முதலமைச்சர் பதக்கங்களையும் மாவட்ட நிர்வாகம் சார்பாக 75 காவல் துறை அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு அரசு துறைகளை சார்ந்த 250 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அனீஷ் சேகர் வழங்கினார்.
இவ்விழாவில், சீத்தாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி (திருநகர்) சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி (நாகமலை புதுக்கோட்டை) அண்ணாமலையார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கரும்பாலை (இல்லம் தேடிக்கல்வி) புனித வளனார் (பெ) மேல்நிலைப்பள்ளி (பழைய குயவர் பாளையம்) அரசு (பெ) மேல்நிலைப்பள்ளி (சோழவந்தான்) அரசு (பெ) மேல்நிலைப்பள்ளி (பேரையூர்) ஆகிய 7 பள்ளிகளைச் சார்ந்த மொத்தம் 791 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இவ்விழாவில், தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் , மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர் இரா.பொன்னி, மாநகர காவல் ஆணையாளர் நரேந்திரன் நாயர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத், உதவி ஆட்சியர் (பயிற்சி) திவ்யான்ஷு நிகம், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.சக்திவேல் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. முன்னதாக இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. 2 ஆண்டு, 11 மாதம் 18 நாட்களில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 1950 ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நாளையே ஆண்டுதோறும் இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.