ரூ. 10 லட்சம் மானியத்தில் பண்ணை இயந்திரங்கள்

ஓசூர் பகுதியில் கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மானியத்தில் பண்ணை இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

Update: 2021-04-27 07:00 GMT

ஓசூர் அருகே விவசாயிகளுக்கு மானியத்தில் பண்ணை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது

கூட்டுப்பண்ணைய திட்டத்தில் ரூ. 10 லட்சம் மானியத்தில் பண்ணை இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டாரத்தில் 2020-21ம் நிதியாண்டின் கூட்டுப்பண்ணைய திட்டம்,  முகளூர் மற்றும் ஒன்னல்வாடி ஆகிய இரண்டு வருவாய் கிராமங்களில் நடைபெற்றது.

ஒவ்வொரு கிராமத்திலும்  20 விவசாயிகளை ஒருங்கிணைத்து ஒரு உழவர் ஆர்வலர் குழு அமைக்கப்பட்டு. ஒவ்வொரு கிராமத்திலும் 5 உழவர் ஆர்வலர் குழு அமைக்கப்பட்டது. 

5 உழவர் ஆர்வலர் குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு உழவர் உற்பத்தியாளர் குழு உருவாக்கப்பட்டுள்ளன.

அதே போல் இரண்டு கிராமங்களிலும் இரண்டு உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அக்குழுக்களுக்கு பண்ணை இயந்திரங்கள் வாங்க கூட்டுப்பண்ணைய திட்டத்தில் ஒரு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு ரூ. 5 லட்சம் வீதம் இரண்டு குழுக்களுக்கு ரூ. 10 லட்சம் மானியத்தில் பண்ணை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் தலைமை வகித்து, பண்ணை இயந்திரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், வேளாண் துணை இயக்குநர் (விதை ஆய்வு) பச்சையப்பன், ஓசூர் வேளாண்மை உதவி இயக்குநர் மனோகரன், வேளாண்மை அலுவலர்கள் பன்னீர்செல்வம், ரேணுகா, துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், உதவி வேளாண்மை அலுவலர் மாதேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News