பர்கூர் அருகே சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி: பார்வையிட்ட பொதுமக்கள்

பர்கூர் அருகே நடைபெற்ற சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.;

Update: 2023-10-16 12:34 GMT

சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியம், ஜெகதேவி ஊராட்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக, அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் இன்று (16.10.2023) பார்வையிட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்து புகைப்படங்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி, இன்று (16.10.2023) ஜெகதேவி கிராமத்தில் அமைக்கப்பட்டது.

இப்புகைப்படக் கண்காட்சியில், தமிழ்நாடு அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்களான, மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மலை கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்கியது, கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம், பள்ளி கல்லுாரி மாணவ மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம், முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித்தோட்டம் மற்றும் மாடித் தோட்டம் அமைக்க காய்கறி விதைகள் வழங்குதல், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்குதல், விவசாயிகளுக்கு 1.50 இலட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டம், நான் முதல்வன் திட்டம், மகளிர்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, புதுமைப்பெண் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு வானவில் திட்டம், மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குதல்,

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தொழில் சார் கடனுதவிகள் வழங்குதல், மீண்டும் மஞ்சப்பை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா, இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சர்வதேச மலர் ஏல மையம், அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பூசாரிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டம், புதிய தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம், மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படங்களும்,

மேலும், அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இப்புகைப்படக்கண்காட்சியை 500 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  பார்வையிட்டனர்.

Tags:    

Similar News