ஸ்ரீ பொன் மாரியம்மன் கோவில் விழா: பெண்கள் பால்குட ஊர்வலம்

துறிஞ்சிப்பட்டி கிராமத்தில் நடந்த ஸ்ரீபொன் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பெண்கள் பால்குடம் ஊர்வலம் நடந்தது.

Update: 2021-08-30 16:00 GMT

ஸ்ரீபொன் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பெண்கள் பால்குடம் ஊர்வலம்.

கிருஷ்ணகிரி அடுத்த துறிஞ்சிப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பொன் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து மண்டல பூஜை 47 நாட்கள் நடத்தப்பட்டது. 48வது நாளான மண்டல பூஜையின் நிறைவு நாள் விழா நடந்தது. இந்த விழாவில், 500க்கும் அதிகமான பெண்கள் ஒரே சீருடையில் அவரவர்கள் வீட்டில் இருந்து பால் குடத்தை எடுத்து வந்து ஊர் பொதுஇடத்தில் ஒன்று கூடினர். பின்னர் வாத்தியங்கள் முழங்க கிராம தேவதை கோவில்களுக்கு பால்குடத்துடன் ஊர்வலமாக சென்று, அந்த கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்தனர். அதை தொடர்ந்து பொன்னியம்மன் கோவிலை சென்றடைந்த அவர்கள், அங்கு நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். அப்போது அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News