கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதந்தோறும் அலகுத் தேர்வுகள்: சிஇஓ அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகு தேர்வுகள் நடைத்த சிஇஓ உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-07-23 09:30 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு,  மாதந்தோறும் அலகு தேர்வுகள் நடைத்தப்பட வேண்டும் என,  தலைமை ஆசிரியர்களுக்கு சிஇஓ அறிக்கை அனுப்பியுள்ளார்.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு கல்வி மாவட்டங்களில், 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்படும் பாடங்களை பார்க்க செய்ய வேண்டும். மாணவர்கள், மாணவிகளை தனி குழுக்களாக பிரித்து, வாட்ஸ் அப்பில் ஆசிரியர்கள் விளக்க வேண்டும். அதில் தலைமை ஆசிரியரும் இருக்க வேண்டும்.

மேலும், மாதந்தோறும் அதிலிருந்து வினாத்தாள்கள் தயார் செய்து, வாட்ஸ் அப் மூலமாகவே அலகு தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் மாதாந்திர அலகு தேர்வுகள் நடத்த வேண்டும். வாட்ஸ்அப் இல்லாத மாணவர்கள், நண்பர்களிமிருந்து வினாத்தாள் பெற்று கொண்டு, தேர்வு முடிந்தவுடன் மாணவர்கள் பெயர், விவரம், பதில்களை தனித்தாளுடன் இணைத்து, பெற்றோர் கையொப்பத்துடன் ஆசிரியர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டும்.

மாணவர்கள் அனுப்பிய விடைத்தாளின் மதிப்பெண் பட்டியலை ஆசிரியர்கள் தயார் செய்ய வேண்டும். தேர்வினை காலை 10 மணி முதல் 11.30 மணி வரை 50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News