மின்தடை, மின்பாதையில் குறைபாடா? தொடர்பு கொள்ள செல்போன் எண் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மின் கோட்டத்தில் மின்சாரம் சார்ந்த புகார்களை தெரிவிக்க, செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2021-07-12 08:21 GMT

இது குறித்து,  கிருஷ்ணகிரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) சுதாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழையால், காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால், தங்கள் பகுதியில் ஏதேனும் மின்தடைகள் மற்றும் மின் பாதைகள் செல்லும் வழித்தடங்களில் உள்ள குறைபாடுகளை கண்டால், மின்வாரிய அலுவலகங்களில் தெரிவிக்கலாம்.

மேலும், மின் கம்பங்களின் அருகிலோ, ஸ்டே கம்பிகளை பிடித்தோ குழந்தைகளை விளையாடக்கூடாது. ஆடு, மாடு போன்றவைகளை கம்பம் மற்றும் ஸ்டே கம்பிகளில் கட்ட வேண்டாம். புதிதாக மின் இணைப்பு கோரும் விண்ணப்பதாரர்கள், ஆர்சிடி என்ற உயிர்காக்கும் சாதனத்தை கட்டடத்தில் பொருத்தி, பாதுகாப்பை உறுதிப்படுத்தி, மின் விபத்துகள் ஏற்படா வண்ணம் தடுத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

மின் விநியோகம் தொடர்பாக தகவல்களை தெரிவிக்க வேண்டிய செல்போன் எண்கள் விவரம் வருமாறு: கிருஷ்ணகிரி உதவி செயற்பொறியாளர் (நகர்) - 9445855437, இளநிலை பொறியாளர் (நகர்)- 9445855439, தொழிற்பேட்டை - 9445855450, உதவி பொறியாளர் - பழையபேட்டை - 9445855440, மேகலசின்னம்பள்ளி - 9445855441, ஆலப்பட்டி - 9445855451, அவதானப்பட்டி - 944598பு253, கிருஷ்ணகிரி உதவி செயற்பொறியாளர் (கிராமம்) - 9445855442, உதவி பொறியாளர் (கிராமம்) - 9445855443,

உதவி பொறியாளர் சூளகிரி நகர் - 9445855446, சூளகிரி கிராமம் - 9445855447, குருபரப்பள்ளி - 9445855448, வேப்பனஹள்ளி - 9445855445, சின்னார் - 9445978517, உதவி செயற்பொறியாளர் காவேரிப்பட்டணம் - 9445855452, காவேரிப்பட்டணம் உதவி பொறியாளர் (நகர்) - 9445855452, காவேரிப்பட்டணம் (தெற்கு) - 9445855456, (வடக்கு)- 9445855454, குட்டிகவுண்டனூர் - 9445855457, உதவி பொறியாளர் கிருஷ்ணகிரி துணை மின் நிலையம் - 9445855438, சூளகிரி - 9445855446, பெண்ணேஸ்வரமடம் - 9445855453, காமன்தொட்டி - 9445855447 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News